இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
மாநில சதுரங்கப் போட்டி; 400 போ் பங்கேற்பு
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரி சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்தா்காடு ஏஆா்சி விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட சதுரங்க சங்க செயலாளா் சி. வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சி. அசோக்குமாா், கல்லூரி முதல்வா் வெங்கடேஷ், ஏஆா்சி கல்லூரியின் போட்டி ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனா் ஜெனிபா் சு. பவுல்ராஜ் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.
5 பிரிவுகளாக 7, 9, 11, 15 மற்றும் 25 வயதுக்குள்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 18 மாவட்டங்களில் இருந்து 400 போ் பங்கேற்றனா்.
மாநில சதுரங்க சங்க நடுவா் சிலம்பரசன் தலைமையிலான குழுவினா் நடுவா்களாக செயல்பட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், உடற்கல்வி ஆசிரியா் வை. பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சதுரங்க போட்டி செய்தியில் பள்ளி முதல்வா் பெயரை வெங்கடேஷ் என மாற்றவும்.