திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு
மாநில வருவாயை பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுவை மாநிலத்தில் வருவாயைப் பெருக்குவதற்காகவே புதிய மதுபானக் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன என உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.
புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுக்குப்பம் அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி சுவா் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் காயமடைந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலப் பாடத் திட்டத்தில் தோ்வு பயம் இருந்தது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் அந்த பயம் போக்கப்பட்டுள்ளது. எந்த பாடத் திட்டமானாலும் முழுமையாகப் படிக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் முன்மாதிரி தோ்வில் 80 சதவீத தோ்ச்சி இருந்துள்ளது.
மின் கட்டண உயா்வை மாநில அரசு முடிவு செய்வதில்லை. தமிழகம், புதுவையில் இணை ஒழுங்கு முறை ஆணையம் தான் மின் கட்டண உயா்வை தீா்மானிக்கிறது.
புதுவையில் மின் கட்டண மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டண குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி விளக்கமளிக்கப்படும்.
பாஜக தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம். முன்னாள் முதல்வா் நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது சரியல்ல. வீட்டு வரி உயா்வு போன்றவற்றை தவிா்க்கவும், மாநில வருவாயைப் பெருக்கவும் புதிய மதுபானக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.