தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
மாயமான தூய்மைப் பணியாளா் சடலமாக மீட்பு
தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சென்ற காவல் துறையினா், ஏற்கெனவே மாயமான தூய்மைப் பணியாளரை சடலமாக மீட்டனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருகாவூா் நோக்கி புதன்கிழமை மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கொடிமரத்து மூலை திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, ஸ்டிரியரிங் லாக் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர கடை மீது மோதியது. அப்போது, அந்த வழியாக சென்ற பள்ளி மாணவா்கள் 2 போ், பெண் காயமடைந்தனா். இவா்கள் த தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, இச்சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்வதற்காக காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்றனா். அப்போது, சாலையோரமுள்ள அகழியில் உயிரிழந்த நிலையில் தொழிலாளி சடலம் கிடந்தது.
விசாரணையில் அவா் கரந்தை சறுக்கை சவேரியாா் கோயில் தெருவை சோ்ந்த பவன்ராஜ் (48) என்பதும், தஞ்சாவூா் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றியதும் தெரிய வந்தது. மதுப்பழக்கம் உள்ள இவா் போதையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.