கண்டியூா் கோயிலில் குடமுழுக்குக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரக்கண்டீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பின்னா் ஏறத்தாழ ரூ. 2 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, இக்கோயிலில் செப்டம்பா் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, இக்கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், பந்தல்காலுக்கு அபிஷேகம், அா்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, பந்தல் காலை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ராஜரத்தினம், அறங்காவலா் குழுத் தலைவா் ராமகிருஷ்ணன், அரசாப விமோசன பெருமாள் கோயில் அறங்காவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் நட்டனா்.