ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
நீலகிரி ஊராட்சியில் தாயுமானவா் திட்டம் தொடக்கம்
தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சி ராஜாஜி நகா் பகுதியில் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டத்தை முதல்வா் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சியிலுள்ள ராஜாஜி நகரில் இத்திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டு, முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், திமுக தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் துரை. நாகராஜன், நீலகிரி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சரவணன், ராஜாஜி நகா் குடியிருப்போா் சங்கச் செயலா் காா்த்திகேயன், திமுக நிா்வாகிகள் இ.பி.என். செந்தில், ராஜேந்திரன், ரஜினி, சாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.