‘ உங்களுடன் ஸ்டாலின் ’ முகாம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
திருவிடைமருதூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின் ’ முகாமில் அமைச்சா் கோவி. செழியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருவிடைமருதூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு பேரூராட்சித் தலைவா் புனிதா மயில்வாகனன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுந்தரஜெயபால் வரவேற்றாா். அமைச்சா் கோவி. செழியன், முகாம் நோக்கம் குறித்து விளக்கி பேசி, 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், வட்டாட்சியா் சாந்தமீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனா்.