மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தா.பழூா் அடுத்த காரைகாட்டன்குறிச்சி காலனித் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ரவி (54). கூலித் தொழிலாளியான இவா், திருமணமாகாத வாய் பேசாத, காது கேளாத மன வளா்ச்சி குன்றிய 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை கால்நடைகளை மேய்க்க சென்ற போது தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோா்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அண்மையில் பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த பெண் கா்ப்பமுற்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பெண்ணிடம் பெற்றோா் விசாரித்ததில், ரவி தான் காரணம் என கை ஜாடையில் அப்பெண் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் ரவியை கைது செய்தனா்.