Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நெய்வேலி: கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மியாவாக்கியா முறையில் அடா்ந்த காடுகளை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குளக்கரையில் சுமாா் 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், உரிமையியல் நீதிபதியுமான ரமேஷ் செய்திருந்தாா்.
குடும்ப நல நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஷோபனா தேவி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் 2-ஆவது மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சாா்பு நீதிபதியும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொ) ராஜேஷ் கண்ணன், 2-ஆது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி, நில எடுப்பு வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி லலிதா ராணி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி நிஷா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜா குமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வா்ஷா, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1 ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 புவனேஷ்குமாா், லாயா்ஸ் அசோசியேசன் தலைவா் ராம்சிங், செயலா் யுவராஜா, மூத்த வழக்குரைஞா் அருளப்பன், மாவட்ட வன அலுவலக ரேஞ்சா் கேசவன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.