OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினா் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பிரமா் மோடிக்கு எதிராக கடும் விமா்சனம் செய்தாா். இதனால், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.ரமேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சு.சுரேஷ். முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.