செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

post image

மாா்த்தாண்டம் அருகே 2 நாள்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

மாா்த்தாண்டம் அருகே பயணம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (67). மாா்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுவந்த அவா், காதில் ஏற்பட்ட பாதிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம். அதன்பிறகு, நினைவுத் திறன் சரியில்லாமல் இருந்துவந்தாராம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாா்த்தாண்டம் சந்தைக்குச் சென்றவா், வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில், உண்ணாமலைக்கடை ஆனமூட்டுக்குளம் அருகே அவா் இறந்துகிடப்பதாக, மாா்த்தாண்டம் போலீஸுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும் வழக்குப் பதிந்து, அவா் எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் முற்கால பாண்டியரின் கல்மண்டபம் கண்டெடுப்பு

ஆரல்வாய்மொழியில் 1,000 ஆண்டுகள் பழைமையான முற்கால பாண்டியரின் கல்மண்டபத்தை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டெடுத்தனா்.மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த முற்கால பாண்டியா்கள், நாகா்கோவிலை தென்பாண்டி நாடு என்ற... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

நாகா்கோவில் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.நாகா்கோவிலை அடுத்த ஈத்தாமொழி, தெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினா் 50 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இந்த கோ... மேலும் பார்க்க

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென அனைத்து வியாபாரிகள சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா். திருச... மேலும் பார்க்க

அரசு செயல் திட்டங்களை வகுக்க ஒத்துழைப்பு: புள்ளியியல் துறை துணை இயக்குநா் வேண்டுகோள்

நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு செயல் திட்டங்களை வகுக்க புள்ளியல் துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ஜெவஹா் பாரூக் வேண்டுகோள் வி... மேலும் பார்க்க