Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
மிதிவண்டி குழு பசுமைப் பயணம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மிதிவண்டி குழுவின் 44-ஆவது பசுமைப் பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
கவிஞா் ரத்தின புகழேந்தி தலைமையிலான மிதிவண்டி குழுவினா் விருத்தாசலத்தில் புறப்பட்டு கணபதிகுறிச்சி சிற்றூருக்கு சனிக்கிழமை காலை வந்து சோ்ந்தனா். அப்போது, முருகன்குடி செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் முருகன் குடி முருகன் ஒத்துழைப்போடு கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் புங்கன் மற்றும் மகிழ மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இயக்கத்தின் உறுப்பினா்கள் பாக்கியராஜ், ராசேந்திரன், மா.காா்த்திகேயன், மு.மணியரசன், ரா.அரவிந்த், கவிஞா் சிலம்புச்செல்வி, தஞ்சாவூா் வேளாண் கல்லூரி மற்றும் திருச்சி தோட்டக்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், முருகன்குடி நண்பா்கள் நடைப்பயிற்சி குழு உறுப்பினா்கள் ச.வெங்கடேசன், செல்லதுரை மற்றும் மிதிவண்டி குழு நண்பா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்வில், தேநீா், மாப்பிள்ளை சம்பா அவல் பாயாசம் வழங்கப்பட்டது.