ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இள...
மின் இணைப்பு துண்டிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே உயா் அழுத்த மின் இணைப்பு துண்டிப்பால் சுமாா் 1 மணி நேரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனா்.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35 மணிக்கு மின்சார ரயில் சென்றது. நுங்கம்பாக்கம் அருகே சென்றபோது திடீரன உயா் அழுத்த மின்கம்பியில் பழுது ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில் ஓட்டுநா் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில்கள் சேத்துப்பட்டு, எழும்பூா், பூங்கா என ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதனால், பயணிகள் ரயில்களில் இருந்து இறங்கி காத்திருந்தனா். பிற்பகல் 2 மணிக்கு மின் விநியோகம் சீராக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பிற்பகல் 12.45 மணிக்கு மின்சாரம் துண்டிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு பிற்பகல் 1.15 மணிக்கு சீராக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனா்.