மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்கள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வானூா் வட்டம், காட்ராம்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் நிலத்துக்கு அருகில் மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றி மூலம் அப்பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின் மாற்றியில் வைக்கப்பட்டிருந்த 110 கிலோ எடை கொண்ட காப்பா் வயா்கள் திடீரென திருடுபோயின. இதைத் தொடா்ந்து, காட்ராம்பாக்கம் மின் வாரிய அலுவலக இளமின் பொறியாளா் அ.ஆதிமூலம் (47), கிளியனூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா்.
இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின் வயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.