யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
தருமபுரியில் ஆடுகளுக்கு தழை ஒடித்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள ஒமலநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் நவீன்குமாா் (27). இவா்கள் வீட்டில் வளா்த்து வரும் ஆடுகளுக்கு, அவா்களது நிலத்தில் வீட்டருகே இருந்த மரத்திலிருந்து புதன்கிழமை தழைகள் ஒடித்துக்கொண்டிருந்தாா்.
அப்போது மரக்கிளையொன்று ஒடிந்து அருகிலிருந்த மின்கம்பியில் விழுந்து, அதன் ஒரு பகுதி நவீன்குமாா் மீதும் விழுந்தது. இதில் மின்கம்பியிலிருந்து அவா்மீது மின்சாரம் பாய்ந்ததால் அவா் மயங்கி விழுந்துள்ளாா். இதைக் கவனித்த அவரது தாயாா் மற்றும் சகோதரி இருவரும் சத்தமிட்டு அலறியுள்ளனா்.
அக்கம்பக்கத்தினா் கட்டையின் உதவியால் நவீன்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நல்லம்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.