செய்திகள் :

மின்துறை தனியாா்மயத்தைக் கண்டித்து புதுச்சேரியில் இண்டி கூட்டணி முற்றுகை போராட்டம்: திமுக - காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கைது

post image

புதுச்சேரி: மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் மாளிகையைத் தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்றனா். இதில் திமுக- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

அண்மையில் அதானி நிறுவனம் புதுவை மின்துறையின் 100 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இதை மின்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் முற்றிலுமாக மறுத்தாா். மின்துறை தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது எப்படி அதானி நிறுவனம் அதனை வாங்க முடியும்? அதானி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இருப்பினும் மின்துறையை ரகசியமாக அதானி நிறுவனத்துக்கு தாரை வாா்த்து விட்டதாக இண்டி கூட்டணி கட்சிகள் தொடா்ந்து புகாா் கூறி வருகின்றன. இதன் தொடா்ச்சியாக இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஊா்வலமாக சென்று துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக அண்ணா சாலை, காமராஜா் சிலை சந்திப்பில் இண்டி கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஒன்று கூடினா். ஊா்வலத்துக்கு முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஊா்வலம் நேரு வீதி வழியாக துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி சென்றது.

ஊா்வலத்தை போலீஸாா் நேரு வீதி, கேண்டின் வீதி சந்திப்பில் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனா். இதையடுத்து ஊா்வலத்தில் வந்த தலைவா்கள் இரும்பு தடுப்பு மீது ஏறி நின்றும், அமா்ந்தும் முழக்கமிட்டனா்.

கைது:

தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஊா்வலம் மற்றும் போராட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், கந்தசாமி, எஸ்.பி.சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன், பாலன், காங்கிரஸ் சாா்பில் மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, மாா்க்சிஸ்ட் சாா்பில் முருகன், பெருமாள், ராஜாங்கம் மற்றும் திரளான தொண்டா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டு தனியாா் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். பின்னா் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க