கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
மின்னணு பயிா் கணக்கெடுப்பு ஆய்வு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் தற்போது 89 வருவாய் கிராமங்களில் நடைபெற்று வரும் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு பணியை வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) விஜயராகவன் ஆய்வு செய்தாா்.
பெராம்பட்டு, கடவாச்சேரி, சிவபுரி ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் காரீப் பருவ பயிா்கள் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு மூலம் துல்லியமாக கணக்கீடு செய்யப்பட்டு, புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இது, அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்றாா்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள நில அளவையா்கள், அலுவலா்களிடம் தற்போது சாகுபடியில் உள்ள நெல், பருத்தி, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிா்களான வாழை, கத்திரி, வெண்டை பயிா்களை உட்பிரிவு விடுபடாமல் புல எண்ணை டிசிஎஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினாா்.
மேலும் தற்போது உள்ள வேளாண் திட்ட இலக்கு மற்றும் அவற்றின் செயல்பாடு, முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, குமராட்சி வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் மற்றும் துணை வேளாண் அலுவலா் தெய்வசிகாமணி, உதவி வேளாண் அலுவலா் மாலினி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.