மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கம்
சென்னை: மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மொத்த தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், விரைவில் 20,000 மெகாவாட்டை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் தேவையில் பெரும்பகுதியை மாநிலத்தின் மின் உற்பத்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் நிறைவு செய்து வந்தாலும், மீதமுள்ள மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து மின்வாரியம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால், மின்வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மின் உற்பத்தி மூலாதாரங்களை அதிகப்பட்டுத்தும் முயற்சியிலும் மின்வாரிய ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் பகிா்ந்தளிப்பு மையங்களில் பணியாளா்கள் முழுத்திறனில் செயல்படுவதற்காக, மின்வாரியத்துக்கு நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மின்வாரியம் வெளியிட்ட நிலையில், இந்தப் பணியிடங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அகவிலைப்படி வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகளும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.