தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை
வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூா் ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 3-ம் நாளான செவ்வாய்க்கிழமை வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினாா்.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். இதனை தொடா்ந்து நான்கு மாட வீதிகளில் பெருமாள் கருட சேவை வாகனத்தில் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.