முதல்வா் கோப்பைக்கான போட்டி: கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், முதலிடம் பெற்ற கீவச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டியில் மாவட்ட அளவில் 15 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. இதில் பங்கேற்ற 16 மாணவா்களுக்கு தலா ரூ. 3000 பரிசுத் தொை, பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவா்களில், 9 மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனா்.
இந்த மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளிச் செயலா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். தலைவா் வெள்ளையன், பொருளாளா் அம்மையப்பன், தலைமை ஆசிரியா் கமலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் அவா்களை ஊக்குவித்த உடல்கல்வி ஆசிரியா்கள் எம்.எஸ்.வாசு, மூா்த்தி, அழகுமீனாள் ஆகியோருக்கும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.