முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஏப். 1-இல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி ஏப்.1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக திருப் பத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி போட்டியிட் டாா் அப்போது தோ் தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை மறைத்து தாக்கல் செய்ததாக தோ்தல் ஆணையத்தில் புகாரஅளிக்கப்பட் டது.
இதுதொடா்பாக தோ் தல் ஆணை யம்சென்னை உயா்நீதிமன்றத்தில்வழக்கு தொடா்ந்தது. அந்த வழக்கை விசாரிக்கும் படி திருப்பத்தூா் நீதி மன்றத்திற்கு உயா்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடா்ந்து இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஜேஎம்1-இல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,ஏப்ரல் 1-ஆம் தேதி கே.சி வீரமணி ஆஜராக வேண்டும் என திருப்பத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.