முன்னீா்ப்பள்ளத்தில் கும்பாபிஷேகம்
முன்னீா்ப்பள்ளம் ஆா்த்தி அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருள்மிகு கற்பக விநாயகா் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், கற்பக விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னீா்பள்ளம், ஆரைகுளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.