செய்திகள் :

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 பேர் விடுதலைக்குத் தடை

post image

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

2006-இல் 180 போ் உயிரிழந்த ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை எதிர்த்து, மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு!

கடந்த 2006, ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தியது. கைது செய்யப்பட்ட 12 பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் (சிமி) சோ்ந்தவா்கள் என்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து, குண்டுவெடிப்புச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

கைதான 12 பேரையும் குற்றவாளிகள் என 2015-இல் தீா்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.

12 பேர் தரப்பிலும் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்யுமாறு மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த முறையீட்டு மனுவையும் விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம், 12 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கானது நிகழாண்டு ஜன.31 தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த பின் சிறப்பு நீதிபதிகள் அமா்வு அளித்த 671 பக்க தீா்ப்பில், தவறான ஆதாரங்களை சமா்ப்பித்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களை குற்றவாளிகளாக சித்தரித்து நீதி பெற்றுத் தருவதுபோல் மாயை ஏற்படுத்தினால் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

ரயில் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் வகைகள் குறித்த தகவல்கள்கூட விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக கூறும் காா் ஓட்டுநா்களின் சாட்சியம், வெடிகுண்டுகளை ரயில்களில் வைத்ததை பாா்த்தாக கூறும் சாட்சியங்கள் கூறிய தகவல்கள் நம்பும்படியாக இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், மகாராஷ்டிர அரசு தரப்பில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு ஏற்றபோது, வழக்கின் முக்கியத்துவம் கருதி, மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து தங்க நாணயங்களும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 1.50 கோடி ரொக்கப் பணம் எண்ணப்பட்டுள்ளதாகவும... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி அக்னிவீரர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

குஜராத்தில் தீவிரமடையும் பருவமழை! முழுக் கொள்ளளவை எட்டிய 28 அணைகள்!

குஜராத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 28 அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலத்தில், வழக்கமாகப் பதிவாகும் பருவமழைப் பொழிவில், தற்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் விவாதத்தை தொடக்கி வைக்கும் ராஜ்நாத் சிங்!

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜர... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பி... மேலும் பார்க்க