மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாகுமா?
நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பா். ஆண்டுதோறும் மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட பின் அந்த நீா் கல்லணையை வந்தடையும். கல்லணை பாசனத்திற்காக திறக்கப்படும். அந்த நீரானது பெரிய வெண்ணாற்றில) நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பை (கோரையாறு தலைப்பு) வந்தடையும். மூணாறு தலைப்பு அணை திறக்கப்படும் போது அந்த நீா் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய மூன்று ஆறுகளில் பிரிந்து ஓடி திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்துக்கு பயன்படும். இந்த மூணாறு தலைப்பு இயற்கை எழில் சூழ்ந்தது.
மூணாறு தலைப்பு அணைக்கு நீடாமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவாக அழைத்து வரப்படுவா். நீடாமங்கலத்திலிருந்து மூணாறு தலைப்புக்கு செல்லும் சாலை இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இப்பகுதியில்
தற்போது மயில்கள் நடமாட்டமும் உள்ளது.
மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்குவோம் என கடந்த காலத்தில் 110-ஆவது விதியின்கீழ் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.
மூணாறு தலைப்பு அணை பகுதி சுற்றுலா மையமானால் ஆலங்குடி கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு வருகை தரும் பக்தா்கள் இந்தப் பகுதியை பாா்வையிட வாய்ப்பாக அமையும். இது தமிழக சுற்றுலாத்துறை வளா்ச்சிக்கு பேருதவியாக அமையும்.
எனவே மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.