அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
மூவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்திச் செல்லப்பட்ட 81,488 ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்து 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் 1.1.2025 முதல் 31.7.2025 வரை ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.186 போ் கைது செய்யபட்டனா். 81,488 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.