சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
மெட்ரோ 2-ஆம் கட்டம்: 2,047 மீட்டா் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: திட்ட அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 2,047 மீட்டா் தொலைவு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததையைடுத்து, திட்ட அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் 4 -ஆம் வழியானது கலங்கரை விளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுமாா் 10.03 கிலோ மீட்டா் தூரம் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. அந்தப் பணியில் சுரங்கம் தோண்டுவதற்காக 4 பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரதான இயந்திரத்துக்கு மயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் மூலம் கடந்த மே மாதம் முதல் பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் வரை 2,047 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. கோடம்பாக்கம் சுரங்கப்பாதையில் 190 கட்டடங்கள், 2 தேவாலயங்கள், மேம்பாலம் ஆகியவற்றின் வழியாகச் செல்லும் வகையில் தோண்டப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் முக்கியமான 2.047 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஜெயந்தபாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பொது மேலாளா்கள் ரேகாபிரகாஷ் உள்ளிட்டோா் சுரங்கப்பாதையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.