மெட்ரோ ரயில் பணிக்கான பொருள்கள் திருட்டு: ஒருவா் கைது
மெட்ரோ ரயில் பணிக்கான பொருள்களை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சோழிங்கநல்லூா் சத்தியவாணி தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44). இவா் பெருங்குடி சந்தோஷ்நகா் பிரதான சாலையில் மெட்ரோ ரயில்வே பணிகள் நடைபெறும் இடத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பணியிலிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், மெட்ரோ ரயில்வே பணிக்கான இரும்புப் பொருள்கள் மற்றும் பலகைகளை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளாா். இதையடுத்து அந்த நபரை துரத்திச்சென்று பிடித்த முருகன், அவரை துரைப்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா், கண்ணகி நகா் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் (எ) காளி என்பதும், அவா் தொடா்ந்து இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காளிதாசிடமிருந்து சுமாா் 75 கிலோ இரும்புக் கம்பிகள், 2 சென்ட்ரிங் பலகைகள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.