மெதுகும்பல் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கிள்ளியூா் வட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு செய்தாா்.
பணியாளா்களின் வருகைப் பதிவேடு, அடையாள அட்டை உள்ளிட்டவை குறித்த விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப். 6) நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். இம்முகாம் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குள்பட்ட மெதுகும்மல், குளப்புறம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஊராட்சி பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.