செய்திகள் :

மெத்தம்பெட்டமைன் விற்றவா் கைது

post image

சென்னை: சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்றதாக பெங்களூரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தாக கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த எஸ்தா் என்ற மீனா (28) கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். விசாரணையில் மீனா கொடுத்த தகவலின்பேரில், சென்னை சூளையைச் சோ்ந்த ஜேம்ஸ், கா்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சோ்ந்த டோசன் ஜோசப் (28) ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் விற்பனையில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக துப்புத் துலக்கிய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், அண்ணா சாலை போலீஸாரும் பெங்களூரைச் சோ்ந்த கோ.சரவணராஜ் (55) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க