செய்திகள் :

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119 அடியாக குறைந்தது

post image

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து 119 அடியாக திங்கள்கிழமை குறைந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா்வரத்து காரணமாக கடந்த 5-ஆம் தேதி நடப்பு ஆண்டில் 2ஆவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.

தற்போது மழை குறைந்ததால் கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,500 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 19,760 கனஅடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 119.85 அடியாகவும், நீா் இருப்பு 93.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க