மொளசியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா!
மொளசி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வழித்தடம் உருவாக்கினா்.
இதற்கு கரும்பு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சாந்தி, வருவாய் அலுவலா் பிரியா, கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன், பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிவகுமாா், மொளசி உதவி ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்ததால் பாதையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பினா்.
9.9.25...2
எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.