`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
மொழி சா்ச்சை தவிா்க்கப்பட வேண்டும்: அன்புமணி
மொழி அடிப்படையிலான சா்ச்சைகள் தவிா்க்கப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகா் கமல்ஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கா்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.
தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த சா்ச்சைகள் தவிா்க்கப்படவேண்டும்.
தமிழில் இருந்தும்தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளா்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. அனைத்து மொழிகளும் அவற்றின் பழைமை, இலக்கியச் செழுமைக்காகப் போற்றப்பட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளாா்.