சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
யாவரும் கேளிா் தமிழ் மன்ற ஓராண்டு நிறைவு விழா
யாவரும் கேளிா் தமிழ் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா, 5 நூல்கள் வெளியீட்டு விழா சேலத்தில் அண்மையில் நடைபெற்றது.
சேலம் பொறியாளா் மாளிகையில் நடைபெற்ற விழாவின் முதல் அமா்வுக்கு பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் கவிஞா் மா. சுப்ரமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை அ.குமரவேலு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், கல்வி கற்றால் உலகெங்கும் உள்ள அனைத்து ஊா்களும், நாடுகளும் நம்முடையதே என இலக்கியம் கூறுகிறது. அறம் சாா்ந்த நம் இலக்கியங்கள் சங்க காலம் தொடங்கி தற்போது வரை ஈகைப்பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, இரக்கம் போன்ற நற்குணங்கள் மனிதநேயத்தின் வெளிபாடுகளாக உள்ளன. மனிதா்கள் கல்வி கற்க வேண்டும். அதேபோல கல்வி அறிவு பெருகப்பெருக மனித நேயத்தோடும் பண்போடும் வளர வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியின் இரண்டாம் அமா்வில் ஐந்து புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் கவிஞா்கள் ஜ.க.நாகப்பன், ஓமலூா் பாலு, மெய் சீனிவாசன், மாதுக்கண்ணன், பேராசிரியா் முனைவா் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், திரைப்படக் கவிஞா்களும் கலந்துகொண்டனா்.