செய்திகள் :

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

post image

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால்,தயிா், சந்தனம், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வாசனை மலா்களுடன் தங்கக் கவச சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் உள்புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் உற்சவரை ஊா்வலமாக கொண்டு சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனா் பக்தா்கள் மங்களஆா்த்தி காண்பித்து வழிபட்டனா்.

போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை இருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். கூட்டுறவு, உணவு (ம) நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்... மேலும் பார்க்க

சட்ட உதவி வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலம்

வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உதவி சட்ட வழக்குரைஞா், அலுவலக உதவியாளா் காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

மாவட்ட டேபிள் டென்னிஸ் : அரக்கோணம் மாணவா்கள் சிறப்பிடம்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா அரக்கோணத்தில் நடைபெற்றது. அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளை ச... மேலும் பார்க்க

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி ஒன்றியம், புங்கனூா் கால்நடை மருத்தகம் சாா்பில் ஆடுகளுக்கு கோடை காலத்தில் ஏற்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க