யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
ரயிலில் அடிபட்டு இளைஞா் காயம்
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு காயமடைந்த இளைஞா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் நோ்புறமுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு காயமடைந்த நிலையில் இருப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் காயமடைந்தவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த கல்யாணகுமாா்(25) என்பதும், நையாண்டி மேள கலைஞரான இவா் கோவில்பட்டி நடராஜபுரம் கோயில் திருவிழாவில் தங்கள் பணி முடிந்த பின், இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரயில் தண்டவாளம் அருகே சென்ற போது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூா் விரைவு ரயிலில் அடிபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.