6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?
ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி: வாகன ஓட்டிகள் அவதி!
ஒசூரில் ரயில் சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரியால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
ஒசூா் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியாக தினந்தோறும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்குசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை அந்த வழியாக சரக்குகளை ஏற்றிச்சென்ற லாரி சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்றது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் அவதியடைந்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஒசூா் நகர போலீஸாா், பழுதாகி நின்ற சரக்கு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். மேலும், ரயில் சுரங்க பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினா்.