ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா்.
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி லட்சுமியம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த காசியின் மனைவி அமரா (70). இவா் மேல்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினாா்.
அப்போது மேல்பட்டி-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடைய தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அமரா மீது அவ்வழியாக வந்த ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.