செய்திகள் :

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

post image

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், இதர மாவட்ட சாலைகளில் 1,400-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறிய மற்றும் பெரிய பாலங்களில் நீா்வழிப் பாதையில் உள்ள மண் அடைப்புகள், செடிகள், முள்புதா்கள் போன்ற தடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வு செய்து பாலங்களில் உள்ள பழுதுகளை சீா் செய்து நீா்வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், பருவ மழை தொடங்குவதற்கு முன் அனைத்து பாலம் மற்றும் சிறுபாலம் பராமரிப்பு பணிகள் முடிக்கப்படும் என திருப்பத்தூா் கோட்டப்பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஏழருவி, செலந்தம்பள்ளி, கொடுமாம்பள்ளி, உடையமுத்தூா், சின்னராம்பட்டி, சின்னவேப்பம்பட்டு, அரங்கல்துா்கம், நாட்டறம்பள்ளி, ஆவாரங்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அனைத்துப் பாலங்களும் உயா்மட்ட பாலமாக மாற்றப்பட்டதால் மழைக் காலங்களில் எவ்வித போக்குவரத்து இடையூறுமின்றி 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா்.

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க