Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூரில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது.
அதில், இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்த குற்றவாளிகளிடமிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சைபா் கிரைம் சம்பந்தப்பட்ட புகாா்களை பதிவு செய்யும் வலைதளமான இலவச தொலைபேசி எண் 1930 குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில், திருப்பத்தூா் விஜயசாந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு போக்ஸோ, குழந்தை திருமணம்,இணையவழி குற்றம், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள், காவலா் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சுமாா் 50 காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.