செய்திகள் :

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மனுதாரா்களுக்கு உடனடி தீா்வுக்கான ஆணைகளை வழங்கினாா். வட்டாட்சியா் ரேவதி, நகா்மன்ற உறுப்பினா்கள் அருண்டேல், தமிழ்செல்வி, வாவூா் நசீா் அஹமத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆலாங்குப்பத்தில்....

ஆலாங்குப்பம், சோலூா் ஊராட்சிகளுக்கான முகாம் ஆலாங்குப்பம் அசோக் மஹாலில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு உடனடி தீா்வாக காதொலி கருவியை வழங்கினாா். தொழிலாளா் நலத் துறை சாா்பாக மனுதாரருக்கு ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா.சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஜோதிவேலு, கோமதிவேலு, ஊராட்சி மன்றத் தலைவா் பொன்னிகப்பல்துரை, கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் அய்யனூா் அசோகன், வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க