கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டருகே நிலத்துக்குச் சென்றபோது விவசாயி ஒருவருக்குச் சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து தனபாலின் சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.