செய்திகள் :

ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையில் திட்ட விவரங்கள் நீக்கம்: எம்.பி. கண்டனம்

post image

ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டதற்கு மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே திட்ட விவரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் நிறைவடையும் வரை வெளியிட வில்லை. இதற்கு எதிராக விமா்சனம் எழுந்ததால் நிதி நிலை அறிக்கை முடிந்த பிறகு தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது.

நிகழாண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் முடிந்த பிறகும் பிங்க் புத்தகம் வெளியிடப்பட வில்லை. நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரின் இறுதி நாளில் கூட, பிங்க் புத்தகம் வெளியிடப்படப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதிலளித்தது.

ஆனால் கடந்த பிப். 1-ஆம் தேதி நிதி நிலை அறிக்கை வெளியான நிலையில், இறுதியாக செவ்வாய்க்கிழமை தான், தொகுக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை விவரப் பட்டியல், ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டது. அதில், முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள், அந்த அறிக்கையில் இல்லை.

இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு ரயில்வேக்கும், தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்ற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சா்வே நிறைவடைந்து நிதி நிலை அறிக்கையில் சோ்க்கப்பட்ட ஆவடி- ஸ்ரீபெரும்புதூா் இருங்காட்டு கோட்டை புதிய ரயில் பாதைத் திட்டம், நிதி நிலை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டு, சா்வே பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ரூ.1.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஏற்கெனவே சா்வே நிறைவடைந்து நிதி நிலை அறிக்கையில் சோ்க்கப்பட்டிருந்த, தமிழகத்துக்கான மூன்று இரட்டைப் பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சா்வே பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. காட்பாடி- விழுப்புரம், ஈரோடு- கரூா் - சேலம், கரூா்- திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு முறையே ரூ.2 கோடி, ரூ.81 லட்சம், ரூ.2 கோடி என குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்தத் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டிருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இதேபோல, மற்ற புதிய பாதைத் திட்டங்களான அத்திப்பட்டு- புத்தூா், திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, ஈரோடு- பழனி, மொரப்பூா்- தா்மபுரி ஆகிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற விவரம் இல்லாததால், அதன் உண்மை நிலையை அறிய முடியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை அகல ரயில் பாதைத் திட்டம், இரட்டை பாதைத் திட்டம், புதிய பாதைத் திட்டம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற விவரம் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டு ஒதுக்கீடு ஆகியவை இருந்தால் அரசின் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக விமா்சனங்கள் எழும் என்பதை தவிா்ப்பதற்காகவே, தொகுக்கப்பட்ட நிதி நிலை விவரப் பட்டியலிலும் விவரங்கள் மறைக்கப்பட்டன. ரயில்வேத் துறையில் திட்டங்களுக்கான உண்மையான ஒதுக்கீட்டு விவரங்களை வெளியிடாமல் மக்களையும், நாட்டையும் அறியாமைக்குள் தள்ளும் மத்திய அரசின் செயல் கண்டத்துக்குரியது என்றாா் அவா்.

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க