துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயம்
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை, ஏஎன்-24 பயணிகள் விமானம் இழந்துவிட்டதாகவும், விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, மாயமான பயணிகள் விமானம் விபத்துக்குள்ளனதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதனைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.