துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
ரஷ்யா - உக்ரைன் போர்: துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?
2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இதை நிறுத்த, பல நாடுகள் முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லை.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்த பிறகு, அவரது பல குறிக்கோள்களில் ஒன்றாக, இந்தப் போர் நிறுத்தமும் ஆகிவிட்டது.
ஆரம்பத்தில் அவர் அமைதியாக பேசிபார்த்தப்போது, ரஷ்யா மசியவில்லை. அதனால், அவர் வரி விதிப்பை காரணம் காட்டி,(மிரட்டி என்று கூட சொல்லலாம்) ரஷ்யாவை உக்ரைனுடனான பேச்சுவார்த்தை மேசைக்கு நகர்த்தி வந்தார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தையை துருக்கி தலைமை ஏற்று நடத்தி வருகிறது.

நேற்று நடந்த பேச்சுவார்த்தை!
நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில், ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளும் 1,200 போர் கைதிகளை அவரவர் நாட்டிற்கு அனுப்ப ஒத்துக்கொண்டுள்ளது. மேலும், காயம்பட்ட ராணுவ வீரர்கள் குணமடைவதற்காக சிறிதுகால போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளனர்.
உக்ரைனை பொறுத்த வரை, வருகிற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இதில் ரஷ்யாவிற்கு உடன்பாடில்லை.
துருக்கியும் சிறிதுகால போர் நிறுத்தம் இல்லாமல் முழு போர் நிறுத்தத்தை அந்த இரு நாடுகளிலும் கொண்டுவர முயல்கிறது. ஆனால், இதற்கும் ரஷ்யா ஒத்துவரவில்லை.

ட்ரம்பின் கெடு
கடந்த வாரம், ட்ரம்ப் ரஷ்யாவிற்கு 50 நாள்கள் கெடு கொடுத்துள்ளார். அதற்குள் இந்த போர் நிறுத்தத்தை எட்டவில்லை என்றால், அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கும்.
ஏற்கெனவே வரி விதிப்புகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் தள்ளாடி உள்ளது. புதின் நிச்சயம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும்... போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும்.
அப்போது தான், ரஷ்யா அமெரிக்காவின் கோர வரி விதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.