அகற்றப்படாத மரங்கள்; அப்படியே ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்ட சாலை விரிவாக்க ப...
ராசிங்காபுரம், மேல்கரைப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், ராசிங்காபுரம், திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி, பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நான்கு சாலை, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், கீரனூா், சரவணபட்டி, பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றனா் அவா்கள்.