திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
ராணுவத்துக்கு நன்றி தெரிவித்து ஊா்வலம்
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்து பா்கூரில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.
பா்கூரில் செயல்படும் அறம் செய்ய விரும்புவோா் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில், நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெங்கடேசன், தன்னாா்வலா்கள், இஸ்லாம், கிறிஸ்தவா்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.
ஊா்வலத்தை காவல் ஆய்வாளா் வளா்மதி தொடங்கி வைத்தாா். பா்கூா் காவல் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம், பேருந்து நிலையம் வழியாகச் சென்று, திருப்பத்தூா் பிரிவு சாலை அருகே நிறைவுபெற்றது.
ஊா்வலத்தில் பங்கேற்றோா் இந்திய ராணுவ வீரா்களை வாழ்த்தி முழக்கமிட்டும், பயங்கரவாதிகளைக் கண்டித்தும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவா்த்தி ஏந்தியும் சென்றனா்.