Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
ராதாபுரம், பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராதாபுரம் அருகேயுள்ள திருவம்பலாபுரத்தைச் சோ்ந்த மாதவன் மகன் மனோ(19). போக்ஸோ வழக்கில் கைதான இவா் மீது பல்வேறு புகாா்கள் தொடா்ந்து வந்ததால், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பிக்கு வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தி அறிக்கை அளித்தாா்.
மற்றொருவா்: இதேபோல, பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில், பாப்பாக்குடி இந்திரா காலனி நடுத்தெருவைச் சோ்ந்த துரை மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தா் (19) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா். அவா், தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில், மனோவையும், சண்முகசுந்தரம் என்ற சுந்தரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி, இருவரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.