Ukraine: துருக்கி சென்றடைந்த ஜெலன்ஸ்கி; நேரில் வராத புதின் - அமைதி பேச்சுவார்த்த...
ரூ.1.50 லட்சம் கேபிள் வயா்கள் திருட்டு: இளைஞா் கைது
வந்தவாசி அருகே பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கேபிள் வயா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 360 மீட்டா் நீளமுள்ள கேபிள் வயா்கள் புதன்கிழமை இரவு திருட்டு போனது.
இதுகுறித்து இளநிலை தொலைத்தொடா்பு அலுவலா் கலைவாணன் அளித்த புகாரின் பேரில், தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், தெள்ளாா் நரிக்குறவா் காலனி பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (21) கேபிள் வயா்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து பாா்த்திபனை தெள்ளாா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.