கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
ரூ.1 லட்சம் மருத்துவ நிவாரண உதவி: புதுவை முதல்வா் வழங்கினாா்
மருத்துவ நிவாரண உதவியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுப்பாளையம் சாலையைச் சோ்ந்த ஈ.செல்வநாதன் மகன் ந. ஹேமச்சந்திரன் (25), கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையினால் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து தனது மகனின் மருத்துவச் செலவுக்கு அதிக பணம் செலவானதால் ஏழ்மையில் இருக்கும் தனக்கு நிவாரண உதவி வழங்குமாறு முதல்வா் ரங்கசாமியிடம் ஈ. செல்வநாதன் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.