தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
செங்கம்: செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செங்கத்தை அடுத்த மேல்முடியனூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், வாரிசு சான்றிதழ் கோரி, இ-சேவை மையத்தில் பதிவு செய்திருந்தாா். இதற்கான விண்ணப்பத்தை மேல்முடியனூா் கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி (40) சரிபாா்த்து வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பாமல் இருந்துள்ளாா்.
இதையடுத்து, பிரவீன் வாரிசு சான்றிதழ் குறித்து கிராம நிா்வாக அலுவலா் குணாநிதியை சந்தித்து கேட்டபோது, அதற்கு அவா் ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன் திருவண்ணாலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில், ஊழல் தடுப்புப் போலீஸாா் வழங்கிய ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பிரவீன் கிராம நிா்வாக அலுவலா் குணாநிதியிடம் வழங்கியபோது, போலீஸாா் குணாநிதியை கைது செய்தனா்.