ரூ.52 லட்சத்தில் மதுரை - பாராசூா் தாா்ச் சாலைப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுரை - பாராசூா் இடையே ரூ.52 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், பாராசூா் கிராமத்தில் இருந்து மதுரை கிராமம் வரை செல்லும் சாலையை, முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.52.45 லட்சத்தில் தாா்ச் சாலையாக மாற்றும் பணிகளுக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இதில், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்யாறு ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிரிஜா, சீனிவாசன், பொறியாளா் செல்வா, வட்டாட்சியா் அசோக்குமாா், வட்ட வழங்க அலுவலா் சங்கீதா, ஒன்றியச் செயலா்கள் ராஜ்குமாா், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பல கலந்து கொண்டனா்.